Chief Minister Daughter Selvi faced problem from an old villager for asking his Votes.
திருவாரூர் தொகுதிக்கு உட்பட்ட மாங்குடி கிராமத்தில்,முதல்வர் கருணாநிதிக்கு ஆதரவாக ஓட்டு கேட்ட அவர் மகள் செல்வியிடம், கிராமத்து முதியவர் ஒருவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
“நீங்க என்ன செய்துட்டீங்க உங்களுக்கு ஓட்டு போட, சாலை வசதிஇல்லை, தண்ணீர் இல்லை, ஓட்டுக்கேட்கும்போது மட்டும்
அய்யா...அம்மான்னு சொல்றீங்க. தேர்தல் முடிஞ்சா யாரையும் காணோம் என்று தைரியமாக ஒத்தை ஆளாக நின்று கேள்வி கேட்டாராம்.
கிராமத்து பெரியவரின் சுயமரியாதை உணர்வு நகரத்தில் வசிப்போரிடமும் வரவேண்டும். எங்களுக்கு பணம் எதுவும் வேண்டாம், எங்கள் தொகுதிகளின் குறைகளைப் போக்கி, வேலையில்லா திண்டாத்தையும், விலைவாசி உயர்வையும் தடுத்து நிறுத்த வேண்டும் என்று வேட்பாளரிடம் அச்சமின்றி
பொதுமக்கள் கேட்க முன் வரவேண்டும். அப்போழுதுதான் ஜனநாயகம் பிழைக்கும்.
எங்கள் ஓட்டு விற்பனைக்கு அல்ல, என வீட்டின் முன் எழுதி தொங்க விட்டுள்ளார், மதுரை அண்ணா நகர் குருவிக்காரன் சாலையில் குடியிருக்கும் அரசு பிற்படுத்தப்பட்டோர் விடுதி காப்பாளர் ஜான். நன்றி, வணக்கம்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment